முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்த நாள் மற்றும் 59வது குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில், முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தேவர் நினைவிடம் அருகேயுள்ள தேவர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டார்.