சுந்தராபுரத்தில் சீசன் யமஹா ஷோரூமின் புதிய கிளை தொடக்கம்!

சீசன் யமஹா ஷோரூமின் புதிய கிளை கோவை சுந்தராபுரத்தில் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாத்திமா சர்ச் பாதிரியார் தேவ பாபு புதிய கிளையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சீசன் யமஹா ஷோரூமின் நிர்வாக இயக்குனர் டேனியல், சீசன் மோட்டார்சின் ஜெனரல் மேனஜர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திறப்பு விழா சலுகையாக ரூ. 4000 மதிப்புள்ள கேஷ் பேக் மற்றும் ரூ. 4000 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.