அமிர்த வித்யாலயத்தில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு விஜயதசமி பூஜை கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது குத்துவிளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன்தொடங்கப்பட்டது.

பின்பு வரவேற்புரையை ஆசிரியர் சத்தியபிரியா வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமிர்த வித்யாலயம் பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் இந்நாள் குழந்தைகளுக்கு கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாகக் கொண்டாடுவார்கள் என்றும் விஜயதசமியின்சிறப்புகளைப் பற்றியும் கூறினார்.

கல்வி கற்க துவங்கும் முதல் நிகழ்வாக முதல்வர் அவர்களால் பாரம்பரிய முறைப்படி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியாக சாந்தி மந்திரம் இசைக்கப்பட்டு பிரசாதம் வழங்கி இவ்விழா இனிதே நிறைவடைந்தது. இந்நன்னாளில் குழந்தை களை ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.