வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் உலக மாணவர் தினம்

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், நாட்டு நலப்பணித் திட்டமும் காட்சி ஊடகத் துறையும் இணைந்து ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாளை உலக மாணவர் தினமாக கொண்டாடியது.

நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமை உரை வழங்கினார். ‘ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் ஓசை காளிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேரூன்றி நில் என்ற தலைப்பில் தனது உரையை வழங்கினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது: இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் மரங்களின் தேவை குறித்தும் உலகலாவிய சூழலுக்கும் அங்கு வாழும் உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் மரங்கள் எவ்வாறு முக்கியம் என்பதையும் விவரித்தார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரி மைதானத்தில் சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்களால் மரம் நடுதல் நிகழ்த்தப்பட்டது. இதை 165 மரக்கன்றுகள்,கலாமின் 90 வது பிறந்த நாள் நினைவாக 90 மரக்கன்றுகளும், 75 வது சுதந்திர தின நினைவாக 75 மரக்கன்றுகளும் நடப்பட்டன.