ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாள் விழா (15.10.2021) கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது பெருமைகள் மற்றும் சாதனைகள் குறித்து உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், நாகராஜன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அப்துல் கலாம் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.