தீபாவளி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு இந்திய ரயில்வேயில் பணிபுரியும் தகுதி வாய்ந்த அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்படும். இதன்மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்,’ எனக் கூறினார்.