தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு 3 தேசிய விருதுகள்

தேசிய அளவில் தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகம் மூண்டு விருதுகளை வென்றுள்ளது. முதலாவதாக பசுமை மற்றும் தூய்மை வளாக விருது, இரண்டாவது பரிசுகள் முறையே முதுகலை மாணவர்களுக்கான அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் தோட்டக்கலை வனவியல் மற்றும் வேளாண் பொறியியல் துறையில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளன.

இந்திய அளவில் தோட்டக்கலை வனவியல் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில மற்றும் மத்திய வேளாண் பல்கலைக் கழங்களுக்கான தேசிய உயர்கல்வி திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் பசுமை மற்றும் தூய்மை வளாக போட்டி அக்டோபர் 2020ல் அறிவிக்கப்பட்டது.

மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகம் 2 வது பரிசை வென்றுள்ளது. இதற்கான ரொக்கப்பரிசு ரூ. 8 லட்சத்திற்க்கான காசோலை வழங்கப்பட்டது.

தேசிய அளவில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முதுகலை படிப்பிற்க்கான ஊக்கத் தொகைக்கான போட்டித் தேர்வில் தமிழ்நாடு வேளான்மை பல்கலையின் தோட்டக்கலை வனவியல் மற்றும் வேளாண் பொறியியல் துறையில்அதிகமான மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று இரண்டாவது இடத்தைப் இப்பல்கலைகழகம் பெற்றுள்ளது.

மேலும் இதற்கான விருதுகளை பல்கலையின் துணைவேந்தர் நீ. குமார், டெல்லியில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மாநில வேளாண் பல்கலை கழகங்களின் துணைவேந்தர் கூட்டத்தில் இந்திய வேளாண் ஆரய்ச்சிக் கழகம் தலைவர் திரிலோச்சன் மொஹபத்ரா அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் இணையவழியாக தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தை பசுமை மற்றும் தூய்மையான வளாக விருதிற்கு தேர்வு செய்ததை அறிவித்தார்.