விஎல்பி கல்லூரியில் “உணவுத் திருவிழா – 2018”

விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை சார்பாக “உணவுத் திருவிழா – 2018” அண்மையில் நடைபெற்றது. விஎல்பி ஜானகியம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என்.சூரியகுமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக “கிச்சன் கிங்ஸ் 2018” என்ற உணவுப் போட்டி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழகத்தின் தலை சிறந்த உணவுத் தயாரிப்பாளர் செஃப் தாமு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.60,000/- மதிப்பிலான ரொக்கப்பரிசும் “கிச்சன் கிங்ஸ் 2018” என்ற பட்டமும் வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர், உணவுத் தயாரிப்பது குறித்த பல கேள்விகளுக்கு செஃப் தாமு பதிலளித்தார். தென்னிந்தியாவின் எஸ்.ஐ.சி.ஏவின் முதன்மை செயலாளர் மற்றும் ஜி.ஆர்.டி உணவகத்தின் உணவியல் நிர்வாக இயக்குநர் செஃப் சீதாராம் பிரசாத் சிறப்புரையாற்றினார்.

கோவை ஃபுட்டில்ஸ் ஐ சார்ந்த லலிதா கெளதம் வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் 30 வகையான செட்டிநாடு உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. 1000 த்திற்கும் மேற்பட்டோர் இந்த உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டனர். கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையின் தலைவர் பேப்ரியன் சார்லஸ் நாதன் நன்றியுரை வழங்கினார்.