அதிமுக சார்பில் 86 ஜோடி மணமக்களுக்கு திருமணம்

கோவை, தொண்டாமுத்தூரில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில், 86 ஜோடி மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களுடன் இன்று (26.03.18) திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வைத்து ஆசிர்வதித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழக அமைப்புச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்திருந்தார்.

விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வீர வாள் வழங்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.