என்.ஜி.பி – ஐ டெக் மாணவர் சிலம்பம் போட்டியில் வெற்றி

தேசிய விளையாட்டு தினத்தன்று நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான சிலம்பம் சுழற்றும் போட்டியில் டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ்வர் பதக்கம் வென்றுள்ளார்.

விருது நகர் மாவட்டம், சத்தூர் லீ கராத்தே மற்றும் சிலம்பம் அசோசியேஷன் மூலம் கலந்துகொண்டு இப்பதக்கத்தை வென்றுள்ளார். இப்போட்டியினை இந்தியன் யூத் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் இணைந்து நடத்தியது.

2020 – 21 ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு தின போட்டிகளில் ஒன்றான சிலம்பம் சுழற்றும் போட்டியில் டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ்வர் கலந்து கொண்டு பதக்கத்தினை வென்றுள்ளார்.

பதக்கம் வென்ற மாணவரைப் பாராட்டி கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி, செயலாளர் தவமணி பழனிசாமி மற்றும் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் புவனேஸ்வரன், டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.