சாக்கடை கழிவுகளை தெருக்களில் கொட்டியபடி சென்ற மாநகராட்சி லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு

சாக்கடைக் கழிவுகளை தெருக்களில் கொட்டிச் சென்ற மாநகராட்சியை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி லாரி ஒன்று சாக்கடை கழிவுகளை ஏற்றிக்கொண்டு பின்பக்க கதவை அடைக்காமல் சாக்கடை கழிவுகளை தெருக்களில் கொட்டியபடி சென்று கொண்டிருந்தது. 2 லாரிகளில் இதேபோல் சாக்கடை கழிவுகள் தெருக்களில் கொட்டிச் செல்வதை பார்த்த அப்பகுதி பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அந்த லாரிகளை மடக்கி பிடித்து மாநகராட்சி நிர்வாகத்தை வரவழைத்து பேசினார்கள்.

பிறகு மாநகராட்சி நிர்வாகம் இனிமேல் இது போன்ற தவறுகள் நடை பெறாது என்று வாக்குறுதி கொடுத்ததின் அடிப்படையில் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாக்கடைக் கழிவுகளை கொட்டி சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையிலேயே தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.