என்.ஜி.பி – ஐ டெக் கல்லூரி மாணவி நி-டான் பிளாக் பெல்ட் போட்டியில் வெற்றி

திருநெல்வேலியில் கடந்த மாதம் நடைபெற்ற நி-டான் பிளாக் பெல்ட் முகாமில் டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மாணவி தட்சணப்ரியா பங்கேற்றார்.

மாணவி தட்சணப்ரியா கோவையில் உள்ள பிளட் மற்றும் ஸ்வீட் தற்காப்புக் கலை அகாடமி சார்பாக திருநெல்வேலியில் நடைபெற்ற நி-டான் பிளாக் பெல்ட் முகாமில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதன் மூலம் அவர் நி-டான் (இரண்டாவது டன்) பதவியைப் பெற்றார். மாணவர்களுக்கு வழிகாட்டவும், போட்டிகளில் நடுவராகவும் செயல்பட அவர் இப்போது ‘மாஸ்டர்’ ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மாணவி தட்சணப்ரியாவை டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் நல்லா ஜி. பழனிசாமி, செயலாளர் தவமணி பழனிசாமி, தலைமை நிர்வாக அதிகாரி, முதல்வர், துறைதலைவர், பேராசிரியர்கள் பாராட்டினர்.