நிர்மலா மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு அங்காடி

நிர்மலா மகளிர் கல்லுாரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் மாணவியர் அங்காடி திறப்பு விழாவானது செயின் பிரான்ஸ் கட்டிடத்தின் அருகில் சமீபத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர் அரிமா ஜான் பீட்டர் ரிப்பன் வெட்டி அங்காடியைத் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சியின் தலைமை நிர்வாக பொறியாளர் கருப்புசாமி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கல்லுாரியின் செயலர் அருட்சகோதரி ரூபி அலங்கார மேரி, முதல்வர் அருட்சகோதரி ஹெலன், துணை முதல்வர் அருட்சகோதரி மேரிபேபியோலா, தேர்வாணையர் புல முதன்மையர் முன்னிலையில் இவ்விழா தொடங்கியது.

தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் பொலன்ஷியா, கிருஷ்ணவேணி, சுதாஷர்மா, குழந்தை தெரசா, பத்மா, அனுஜா, மீனாட்சி, உமா ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அனைத்து துறை பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.