இந்துஸ்தான் கல்லூரியில் நாளை தடுப்பூசி முகாம்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.

கல்லூரியின் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் (02.09.2021) காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் அக்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.