எஐசி ரைய்ஸ், ஹப் ப்ரஸ்ல்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஹப் ப்ரஸ்ல்ஸ் (HUB.BRUSSELS) பெல்ஜியத்தின் துணை தூதரகம் மற்றும் எஐசி ரைய்ஸ் ஸ்டார்ட் அப் இன்குபேஷ் மையம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எஐசி ரைய்ஸ் தொழில் அமைப்பு இணைய கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் FDP களில் தொழில் அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் வணிகம் செய்வதற்கான நடைமுறை மற்றும் அடைப்படை நிகழ்வுகளைச் சிறப்பாக ஏற்படுத்துகிறது. பெல்ஜியம் கிளஸ்டர்கள் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புகளில் இருந்து பேச்சாளர்களைக் கொண்டு தொழில் சார்ந்த செய்திகள் அறியப்படுத்துகின்றன.

எஐசி ரைய்ஸ்லிருந்து தொடக்க நிறுவனங்களை ஹப் ப்ரஸ்ல்ஸ் நிலைநிறுத்த ஊக்குவிக்கவும், எளிதாக்கவும் ஹப் ப்ரஸ்ல்ஸ் எந்த ஆலோசனைக் கட்டணமும் இல்லாமல் சேவையை இலவசமாக செய்கிறார்கள். அலுவலக இடம், சந்திப்பு அறைகள், நிறுவனங்களின் தரவுத்தளம் சாத்தியமான பங்களிப்புகள் வாடிக்கையாளர்களுடன் பி 2 பி ஏற்பாடு மற்றும் பணியமர்தலுக்கான வழிகாட்டுதல், ரியல் எஸ்டேட் எந்த கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் எஐசி ரைய்ஸ்சின் தலைமை நிர்வாக அதிகாரி மதன் ஆ.செந்தில், முகமுத அக்ரம் ஹஜ்ஜாம், ஏரியா மேலாளர் இன்வேர்ட் இன்வெஸ்ட்மென்ட் – மேனா மண்டவம், இந்தியா மற்றும் எஐசி ரைய்ஸ் தொழில் அமைப்பின் மூத்த மேலாளர் எபின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.