எல்.எம்.டபிள்யூ – வில் பணி நியமனமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள  லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW)  நிறுவனத்தாரால்  இணைய  வழியாக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் தொழில்நுட்ப தேர்வு ஆகியவற்றில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்  பி. குருராஜன் மற்றும் கே. கார்த்திகேயன் ஆகியோர்  தேர்வு பெற்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில்   ப்ராடெக்ட்  இன்ஜினீயர்களாக  பணி நியமனம்  பெற்றுள்ளனர் .

பணி நியமனம்  பெற்ற மாணவர்களை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மிநாராயணசாமி,  முதல்வர்  ஆர். என். உமா,  துணை முதல்வர்   டி.கோபாலகிருஷ்ணன், வேலை வாய்ப்பு அலுவலர் பி.மோகன் குமார்,  துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

வேலை வாய்ப்பு பெரும்  மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் பொதுத் திறன், தொழில்நுட்பத் திறன், குழு விவாதம், திறனறிவு போன்றவற்றில் பயிற்சி நிபுணர்களால் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன .