வாட்ஸ் அப்பில் ‘View Once’ என்ற புதிய வசதி!

வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையிலான புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், View Once என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியோக்களை மற்றொருவர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க இயலும். ஒரு முறை போட்டோவை ஓபன் செய்து பார்த்துவிட்டு, குறிப்பிட்ட அந்த Chat-ஐ விட்டு வெளியே வந்துவிட்டால், அந்த புகைப்படம் தானாக மறைந்துவிடும். மேலும், அந்த புகைப்படங்கள், சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் சேவ் (save) ஆகாது எனவும், வேறொருவருக்கு பார்வேர்டும் (forward) செய்ய இயலாது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அந்த புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ள எந்த தடையும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.