கே.பி.ஆர் கல்லூரியில் ‘தரவு அறிவியல்’ திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கணினி அறிவியல் துறை சார்பாக, (Data science – The Next Generation Data Festival) எனும் தலைப்பில் ஏழு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு (15.07.2021 -23.07.2021) நடைபெற்றது.

இந்நிகழ்வில் Artificial Intelligence(AI) எனும் தலைப்பில் நவநீத் மலிங்கன், நுண்ணறிவு லேப் நிறுவனர் மற்றும் இயக்குநர் (15.07.2021 – 19.07.2021) உரைநிகழ்த்தினர். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர் நவநீத் மலிங்கன் தமது உரையில், AI தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்தி அதன் மாதிரிப் படிவங்களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதை விளக்கினார். மேலும் பிரபலச் செயலிகள் மற்றும் விளையாட்டுகளின் பயன்பாட்டில் இப்பாகுப்பாய்வு எவ்வாறு உதவுகிறது என்பதை விரித்துரைத்தார். AI பயன்பாட்டின் படிநிலை வளர்ச்சியை விவரித்தார். பைத்தான் (Python) எனும் மென்பொருள் மொழிக் குறித்த சந்தேகங்களைத் தெளிவுப்படுத்தினார்.

Gateway Software Solution நிறுவனத்தின் தொழில்நுட்ப மேலாளர் சபரிநாதன் முத்து “R-Programming” எனும் தலைப்பில் (20.07.2021 – 23.07.2021) உரை நிகழ்த்தினார். அவர் R-Programming மற்றும் (Python) மொழி இடையிலான உறவை விளக்கினார். மேற்கூறிய மென்பொருட்கள் வழி எவ்வாறு ஆய்வு நிகழ்த்துவது என்பதைக் கூறினார். அதன் காப்புரிமைப் பயன்பாட்டை விரிவாகக் கூறினார்.

இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.