‘இந்தியா டுடே’  தரவரிசைப் பட்டியலில் கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி முதலிடம் !

‘இந்தியா டுடே’ வெளியிட்ட கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில், கோவை மாவட்டத்தில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி’ முதலிடம் பிடித்துள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று, தேசிய தர நிர்ணயக்குழுவின் ‘ஏ பிளஸ்’ கிரேடு மற்றும் தன்னாட்சி அந்தஸ்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இங்கு பி.காம்., பி.காம். அக்கவுண்டிங் அண்டு பைனான்ஸ், பி.காம்., கம்ப்யூட்டர அப்ளிகேஷன்ஸ், பி.காம். தகவல் தொழில்நுட்பம், பி.காம். சர்வதேச வணிகம், பி.காம். பிரபெஷனல் அக்கவுண்டிங், பி.காம். பிசினஸ் பிராசஸ் சர்வீசஸ், பி.காம். பேங்கிங் அண்டு இன்சூரன்ஸ், பி.காம். கார்ப்பரேட் செகரடரிஷிப், பி.காம். காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங், பி.காம். ரீடெய்ல் மார்க்கெட்டிங், பி.எஸ்சி.

எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்சி. கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. வேதியியல், பி.எஸ்சி. உயிரி தொழில்நுட்பம், பி.எஸ்.சி. உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மை, பி.சி.ஏ., பி.சி.ஏ. இன்டேக்ரெட்டட் வித் கூகுள், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஐபிஎம்., பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம், பி.எஸ்சி. கணினி அறிவியல் காக்னிடிவ் சிஸ்டம்ஸ் அண்டு டி.சி.எஸ்., பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ., பி.பி.ஏ. கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் ஆகிய 27 இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற எம்.பி.ஏ., எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் சிஸ்டம், எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. கணினி அறிவியல், எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம், எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்.எஸ்.டபுள்யூ., எம்.காம். பைனான்ஸ் அண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், எம்.காம். சர்வதேச வணிகம் ஆகிய 9 முதுநிலை பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

எலெக்;ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், வணிகவியல், உயிரி தொழில்நுட்பம், மேலாண்மை அறிவியல், சமூகப் பணியியல், ஆங்கிலம், தமிழ், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்.ஃபில்., பி.எச்டி. ஆராய்ச்சி படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வி, திறன் மேம்பாடு, தகவல் தொடர்பு, விளையாட்டு, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குபவர்களாக இங்கு உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் பயனாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியானது பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்து வருகிறது. ‘இந்தியா டுடே’ தற்போது வெளியிட்ட கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் இக்கல்லூரி முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது தற்போதைய சாதனையாகும்.

‘இந்தியா டுடே’ நிறுவனம் 25-வது ஆண்டாக இந்தியாவில் உள்ள கல்லூரிகளை சர்வே செய்து, பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் கல்லூரிகளை தரவரிசைப்படுத்தியதில் அறிவியல் பாடப்பிரிவு, பி.சி.ஏ. பாடப்பிரிவு, விடுதி மேலாண்மை பாடப்பிரிவு ஆகியவற்றில், கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பாடப்பிரிவுகளின் தரவரிசையில் அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. அந்தவகையில், அறிவியல் பாடப்பிரிவுகளில் அகில இந்திய அளவில் 51-வது ரேங்க், பி.சி.ஏ., பாடப்பிரிவில் அகில இந்திய அளவில் 24-வது ரேங்க், வணிகவியல் பிரிவில் அகில இந்திய அளவில் 74-வது ரேங்க், விடுதி மேலாண்மை பாடப்பிரிவில் அகில இந்திய அளவில் 31-வது ரேங்க், பி.பி.ஏ., பாடப்பிரிவில் அகில இந்திய அளவில் 48-வது ரேங்க், கலைப் பாடப்பிரிவுகளில் அகில இந்திய அளவில் 77-வது ரேங்க், சமூகப் பணியியல் பாடப்பிரிவில் அகில இந்திய அளவில் 29-வது ரேங்க் பெற்று தேசிய அளவில் தனக்கான இடத்தைப் பதிவு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியை இச்சாதனைக்கு உயர்த்திய முதல்வர் மற்றும் செயலர் டாக்டர் பி.எல்.சிவக்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை கல்லூரி நிர்வா அறங்காவலர் உயர்திரு டி.லட்சுமி நாராயணசாமி பாராட்டினார்.