ராமகிருஷ்ணா கல்லூரியின் வளாகத்தேர்வில் 1,172 மாணவர்கள் தேர்வு

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வளாகத் தேர்வில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசியளவில் புகழ்பெற்ற பல முன்னணி நிறுவனங்கள் இதுவரை 1,172 மாணவ மாணவிகளை தேர்வு செய்துள்ளது.

இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் வருடந்தோறும் டிசிஎஸ், இன்போசிஸ், சிடிஎஸ், விப்ரோ, ஹெச்.சி.எல், மெக்கன்சி உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

2020-2021 கல்வியாண்டில் பணிநியமனத்துக்காக நடத்தப்பட்ட வளாகத் தேர்வில், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 1,172 மாணவ, மாணவிகளை இந்நிறுவனங்கள் தேர்வுசெய்து பணியமர்த்தியுள்ளன. பட்டப்படிப்பை முடித்த கையோடு வேலைவாய்ப்பிற்கு தேர்வாகியுள்ள இம்மாணவர்கள் வருடாந்தர ஊதியமாக 4 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.