கோவையின் ‘சஞ்சீவனி’ பி.எஸ்.ஜி

2020-ன் துவக்கத்தில் ’ஏதோ சீனாவில் மர்ம காய்ச்சலாம்!’, என்று துவங்கிய செவி வழி செய்தி இன்று சரித்திரத்தில் மறந்திட முடியாத பெருந்தொற்றாக மாறி, அலை அலையாக உலகையே உலுக்கி வருகிறது.

துவக்கத்தில் தடுமாற்றங்கள் ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்த நம் தமிழ்நாட்டிலும் இந்த நுண்கிருமி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்கியது. இயல்பு நிலையில் உலகம் சுழன்ற போது தமிழ்நாட்டில் தன் திறனை காட்டிய அனைத்து துறை வல்லுனர்களுக்கும், இந்த கிருமி பல சவால்களை முன் வைத்து, மலைபோல் எதிரே நின்றது.

படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, தினசரி அதிகரிக்கும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை என பல அழுத்தங்கள் இருந்தாலும், இந்த பெருந்தொற்று காலத்தின் துவக்கத்திலிருந்து இன்று வரை மிகவும் அமைதியாக, திறமையாக, எளிய மக்கள் முதல் கார்ப்ரேட் எஜமான்கள் வரை கோவை மட்டுமில்லாமல், மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் நம்பிக்கை தரும் மருத்துவமனையாக ‘பி.எஸ்.ஜி. மருத்துவமனை’ செயல்பட்டு வருவது கோவைக்கு பெருமை தானே!

இராமாயணத்தில், லக்ஷ்மணனுக்கும் ராவணனின் மகன் இந்திரஜித்திற்கும் கடுமையான பலப்பரீட்சை நேர்ந்த போது அந்த சண்டையின் இறுதியில் இந்திரஜித் அசுரத்தனமாக தாக்கியதால் லக்ஷ்மணன் படுகாயமடைந்து, மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பார்.

அப்போது அதிசயம் நிறைந்த மருத்துவ செடியான சஞ்சீவ கரணியை அதிகம் கொண்ட மருத்துவ மலையை அனுமன் இமயத்தில் கண்டு, தூக்கி வந்து காத்ததாக இலக்கியம் கூறுகிறது.

கோவை கொரோனாவின் தாக்கத்தால் பெரிதும் துயர் அடைந்த போது உயிர் காக்கும்

சஞ்சீவனியாக இந்த மருத்துவமனை இருந்துள்ளது என்பது இங்கு கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் கருத்து. அவர்கள் தங்கள் பாராட்டுகளை பல வழிகளில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் சில தொகுப்பை இங்கே காணலாம்.

ஆயிரம் ஆண்டுகள் தொடர பரா‘சக்தி’ கொடுப்பாள்!

எல்.கோபாலகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர், பி.எஸ்.ஜி அறக்கட்டளை

இத்தனை ஆண்டுகளாய் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தபோதிலும், இந்த பெருந்தொற்று காலம் தான் சமுதாயத்தின் மீது நாங்கள் கொண்டுள்ள முழு அர்ப்பணிப்பை மக்களுக்கு காட்டிட ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது.

எதிர்பார்த்ததை விட சவால்கள் அதிகமாக இருந்தபோதிலும் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்று கவனமாக ஆலோசனை செய்து, தேவையான மனிதவளம், மருத்துவ உபகரணம், தேவைக்கேற்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் என அனைத்தையும் தொற்றின் தாக்கம் கோவையில் அதிகரிக்கும் முன்பே செய்தோம்.

வழங்கும் மருத்துவசேவையில் ஒரு இம்மி அளவு கூட தரமும், கனிவும் குறைந்திட கூடாது என எங்களுடைய இலக்கில் மிக தெளிவாக இருந்தோம். இதை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல எங்களுக்கு பெரிய பலமாக இருந்தது எங்கள் மருத்துவமனை ஊழியர்கள் தான்.

இந்த ஆபத்து நிறைந்த சூழலிலும், எங்கள் சேவையை நாட்டு மக்களுக்கு வழங்க உதவிய அத்தனை பி.எஸ்.ஜி ஊழியர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மனிதன் என்ன தான் திறமையும் செழுமையும் கொண்டவனாக இருந்தாலும் இயற்கைக்கு முன் ஒரு சிறிய படைப்பே என்று காலம் அடிக்கடி நமக்கு காட்டிக்கொண்டு வருகிறது. கொரோனா போன்ற கொடும் நோய்பிணியை இதற்கு முன் மனித இனம் பலமுறை சந்தித்துள்ளது, அதை கடந்தும் வந்துள்ளது.

பிளேக் எனும் கொடிய நோய் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தலைதூக்கி தமிழ்நாட்டில் ஒரு இருண்ட காலத்தை கொண்டுவந்தது. எப்படி ஒரு சிறு நுண்கிருமி இப்போது நம்மை தாக்கிவருகிறதோ அதே போல அப்போதும் சிறிய எலிகள் மூலம் பிளேக் நோய் பரவியது. கோவையில் ஆயிரக்கணக்கானோர் மறித்தனர்.

வைத்தியங்கள் செய்தாலும், ஒருவர் வாழ்வதும் வீழ்வதும் இறைவன் கையிலே தான் இருக்கின்றது. அன்று மக்கள் இறை நம்பிக்கை ஒன்றை மட்டுமே பெரிதாக நம்பினர்.

இன்று நம்மிடம் விண்வெளி சென்று நிலவை ‘என்ன விலை’ என கேட்கும் அளவு தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும், நம் அனைவர் மத்தியிலும் ‘இன்றைய சூரிய உதயத்தை கண்ட நாம் அடுத்த விடியலை காண்போமா?’ என்ற கலக்கநிலை நிலவுவதை சிறிதளவும் மறுத்துவிட முடியாது.

நிச்சயம் இந்த ஆபத்தான காலத்திலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால் இந்த பெருந்தொற்றை விரைவில் கட்டுப்படுத்துவது என்பது மக்கள் கையில் தான் உள்ளது.

இப்படி பட்ட கடுமையான சூழ்நிலையிலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது, இது பாராட்டிற்குரியது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி அறக்கட்டளை நாட்டின் வளர்ச்சியில், குறிப்பாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்களின் முன்னேற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த தர்ம ஸ்தாபனத்தின் சேவைகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தொடர பராசக்தி ‘சக்தி’ கொடுப்பாள் என்று நம்புகிறேன்.

துரித நடவடிக்கை, தரமான மருத்துவ சேவை

டாக்டர்.முரளி, தொற்று நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்,

பி.எஸ்.ஜி. மருத்துவமனை

2020ன் துவக்கத்திலேயே (ஜனவரி-பிப்ரவரி) எங்கள் மருத்துவமனையின் டீன் டாக்டர்.ராமலிங்கம் வழிகாட்டுதலில் கொரோனாவை எவ்வாறு எதிர்கொள்வது, பாதிப்படையும் மக்களுக்கு எப்படி சிகிச்சை வழங்குவது என பல ஆலோசனைகளை செய்து, கொரோனா சிகிச்சைக்கென பிரத்தியேக செயற்குழு ஒன்று அப்போதே உருவாக்கப்பட்டது.

இதில் என்னுடன், நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர்.கார்த்திகேயன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.ஜெயவர்தனா, நுண்ணுயிரியலாளர் டாக்டர்.லாவண்யா மற்றும் கம்யூனிட்டி மெடிசின் நிபுணர் டாக்டர்.சுதா ராமலிங்கம் ஆகியோர் அடங்குவர்.

எங்கள் புது பிரத்தியேக எட்டு தளம் கொண்ட வளாகத்தை கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தோம். இந்த வளாகம் உருவாகும் போதே சிகிச்சை வழங்கும் பிற வளாகத்திலிருந்து எல்லாவிதத்திலும் பிரிக்கப்பட்டு இருந்தது. எனவே கொரோனாவிற்கு சிகிச்சை வழங்க இது மிகவும் உதவியாக இருந்தது.

எங்களின் கீழ் 200 – 300 மருத்துவர்கள், 500 – 600 செவிலியர்கள், இன்னும் பல துணை மருத்துவ பணியாளர்கள், பிற மருத்துவ ஊழியர்கள் என குறைந்தது 1000 பேர் கடந்த ஆண்டு தொடங்கி இப்போது வரை இரவு பகலாக, தளர்வின்றி, மக்கள் நலனுக்காக அரும்பாடுபட்டு வருகிறோம்.

சிகிச்சை வழங்க துவங்கிய முதல் நாளிலிருந்தே யூகத்தின் அடிப்படையிலோ அல்லது சோதனை அடிப்படையிலோ எந்த ஒரு அணுகுமுறையையும் பின்பற்றவில்லை. முழுக்க முழுக்க

உலக மருத்துவ அரங்கில் கடைபிடிக்கப்படும் சர்வதேச தரத்துடனான சிகிச்சை முறைகளை தான் இங்கு பின்பற்றிவருகிறோம்.

இதுவரை 12,000 க்கும் அதிகமான தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கும், 2000 தொற்றின் அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில்/ மிக குறைந்த கட்டணத்தில் உலக தரம் கொண்ட சிகிச்சையை வழங்கி யுள்ளோம். தொற்றின் தாக்கம் லேசாக உள்ளவர்களில் இருந்து தீவிரமான பாதிப்புடைய நபர்கள் வரை மிக அதிகமானோரை நாங்கள் இந்த ஓர் ஆண்டில் குணமடைய வைத்திருக்கிறோம்.

இதற்கு பேருதவியாக இருந்தது மூன்று காரணிகள்; நாங்கள் கடைபிடித்த சிகிச்சை முறை, எங்கள் கொரோனா மருத்துவ குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் எங்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் தொடர்ச்சியான ஆதரவு.

ஆனால் இந்த பெருந்தொற்றை சமாளிப்பதில் சவால்கள் பல இருந்தது. முதல் அலையின் துவக்கத்தில் சிகிச்சைக்கு இதுதான் சரியான மருந்து என உலகத்தில் யாரும் கூற முடியாத நிலை தான் நிலவியது. எனவே சிகிச்சை நெறிமுறைகளை வகுக்கவும் சிறு காலம் எடுத்தது. மே மாதத்திற்கு பிறகு சிகிச்சைக்கு உதவக்கூடிய மருந்துகளை அறிவியல் சான்றுகளுடன் அடையாளம் கண்டு அந்த சவாலை கடந்து வந்தோம்.

அந்த சமயத்தில் அச்சம் கொண்ட மருத்துவ பணியாளர்களுக்கு நம்பிக்கை வழங்கி, அறிவியல் பூர்வமாய் தொற்று பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுத்தால், பாதிப்பில்லாமல் பணியாற்றலாம் என்பதை எடுத்துக் கூறினோம், அவர்களும் ’நாம் சிகிச்சை வழங்க அச்சப்பட்டால் பின் யாரால் சிகிச்சை வழங்கிட முடியும்’ என எண்ணி செயல்பட தொடங்கினர்.

இரண்டாம் அலையில் சிகிச்சைக்கு தேவையான மருந்தான ரெம்டெசிவர், போதிய அளவு ஆக்சிஜன் ஆகியவை கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. தமிழக அரசின் உதவியுடன் இந்த இரு முக்கியப் பொருட்களும் போதிய அளவில் தடையின்றி கிடைக்க ஆரம்பித்தது.

ஆனால் மூன்றாம் அலை என்று ஒன்று நேரும் பட்சம், அது குழந்தைகளை பாதிக்க வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. எனவே இதற்கு முன்னெச்சரிக்கையாக, நாங்கள் எங்கள் கொரோனா சிகிச்சை வழங்கும் பிரத்தியேக வளாகத்தில் 35 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவையும், ஒரு தளத்தின் முழு பரப்பிலும் குழந்தைகளுக்கான வார்டையும் உருவாக்கி வருகிறோம்.

முதல் அலையில் மக்களுக்கு இருந்த பயம் இப்போது தளர்ந்துள்ளது. அரசு காட்டும் வழிமுறைகளை பின்பற்றுவதில் கவனமில்லாமல் இருக்கின்றனர். இது தவறு. தேவையற்ற சமூக கூடல்களை தவிர்க்கவேண்டும், முகக்கவசம் அணிவதில் அலட்சியம் கூடாது, கைகளை சுத்தமாக வைத்துகொள்ள, அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். இத்துடன் தாமத படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டால் கொரோனா வராது என்றில்லை, அதன் தாக்கத்தின் தீவிரம் பெரிதளவில் இருக்காது என்பதற்காகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவற்றை கடைபிடித்தால் விரைவில் கொரோனாவை கோவை வெல்லும்.

குணமடைந்தோரின் கருத்துமிகத் தூய்மையான பராமரிப்பு!

கார்த்திகேயன்

ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். நன்றாக சிகிச்சை அளித்து ஒரு வாரத்தில் என்னை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினர்.

கொரோனா வார்டுகளை மிகத் தூய்மையாக பராமரிக்கின்றனர். கழிவறைகள் போன்ற இடங்களை சுத்தமாக வைத்துள்ளனர். மருத்துவர்களும், செவிலியர்களும் 24 மணிநேரமும் அங்கு இருந்து கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்கின்றனர். எனக்கு சிக்கிச்சையளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள், பாராட்டுகள்

தாண்டவக்கோன், திருப்பூர்

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனாவுக்கென்று விரிவான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். எட்டுத் தளங்கள், தளத்திற்கு மூன்று வார்டுகள், வார்டுக்கு 35 படுக்கைகள் உள்ளன.

இங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் ராணுவ வீரர்கள் போல செயல்படுகிறார்கள். காலை ஒரு சுற்று எல்லாரையும் தனித் தனியாக விசாரித்து சிகிச்சை சிபாரிசு செய்கிறார்கள். மறுபடியும் மாலையில் அதே மருத்துவர் அதே தனித்தனி விசாரணை.

இரவு ஒரு சீனியர் மருத்துவர் வருகிறார். அவரும் ஒரு சுற்று காலையில் வந்த உதவி மருத்துவரோடு சேர்ந்து எல்லாரையும் விசாரிக்கிறார். செவிலியர்களையும் சும்மா சொல்ல முடியாது. கால்களில் சக்கரமில்லை அவ்வளவுதான்.

மிகவும் இயலாத மற்றும் முதிய நோயாளிகளுக்கு உணவும் மருந்தும் குழந்தைகளுக்கு மாதிரி புகட்டுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை அசராமல் சமாளிக்கிறார்கள் என்பேன். சிகிச்சையிலும் எங்கும் அசிரத்தை இல்லை என்பது என் நேரடி அனுபவம். இடைவிடாத மின்சாரம், கழிப்பறையில் நாள் முழுவதும் வெந்நீர், போதுமான சுகாதாரப் பணியாளர்கள், எல்லோருக்கும் பிஸ்லரி தண்ணீர், நாள் முழுவதும் குடிக்க வெந்நீர், குறிப்பாக உணவு ஏற்பாடுகளை மெச்சியே ஆகவேண்டும்.

தினசரி டயட்டீஸியன் ஒரு ரவுண்ட் வருவார். அன்று நாம் கேட்கும் மெனு மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. அதாவது நோயாளிகள் பெயர் ஒட்டிய தனித்தனி பார்சல்கள் படுக்கைக்கே தேடி வருகின்றன.

எனக்கு ஆரம்பத்தில் உணவு மெனுவில் சில குளறுபடிகள் இருந்தது. பிறகு வந்த ஒரு குட்டிப் பெண் ”எல்லாம் சரியாக்கித் தரேன் அப்பா” என்று எனக்கான மெனுவை துல்லியமாக ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ஒரு நாள் அப்பெண் வேறு வார்டுக்கு டூயூட்டி மாறுவதாக வந்து சொல்லி விட்டு “உங்கள் மெனுவில் மாற்றம் இருக்கா” என்றார். “ஒன்றும் இல்லையம்மா, ஒத்துழைப்பிற்கு நன்றி உன் பெயர் என்னம்மா?” என்றேன். “டயட்டீஸியன் தீபா” என்றவர் “டேக் கேர் அப்பா” என்று விடை பெற்றார். நன்றாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

எப்படியும் அத்தனை சேவைகளும் தொகையாக மாறி மிரட்டும் தான். எனினும் நாம் சரியான சேவைகளைப் பெற்றிருக்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது. இந்த நேரத்தில் அல்லாமல் வேறு எப்போது பாராட்டுவது ஒரு நல்ல மருத்துவமனையை. கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை நிர்வாகமே, நன்றிகள் பாராட்டுகள்.

அருமையான அணுகுமுறை!

தேவேந்திரன், கோவை

2020 நவம்பர் மாதத்தில் நான் பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டேன். அவர்கள் வழங்கிய சிகிச்சையால் வெறும் 7 நாட்களில் குணமாகி வீட்டிற்கு சென்றேன்.

என் உடல்நிலையை நன்றாக ஆய்வு செய்து என்னை நன்றாக கவனித்துக்கொண்டனர். மருத்துவர்களின் அணுகுமுறை மிக அருமையாக இருந்தது. தினமும் உடல் நிலையை பற்றி ஆய்வு செய்வார்கள், தகவலை என் இல்லதோர்க்கும் தெரிவிப்பார்கள்.

அந்த 7 நாட்களும் செவிலியர்கள் மிகவும் அன்போடு பார்த்துக்கொண்டனர். ஒரு வாரகாலம் எந்த மன உளைச்சலும் இன்றி அங்கு இருந்தேன்.

என் நண்பர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது “பி.எஸ்.ஜி சென்றால் நிச்சயம் காப்பாற்றி விடுவார்கள்” என அவர்களுக்கு சொல்லி அவர்களையும் நான் அங்கே செல்ல அறிவுறுத்தினேன்.

குறை எதுவுமில்லை

.பிரகாஷ், கோவை

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அவர்கள் எனக்கு அளித்த சிகிச்சை மன நிறைவாக இருந்தது. அங்கு அளித்த சிறந்த சிகிச்சையினால் ஒரு வாரத்திலேயே குணமடைந்தேன்.

நோயாளி அனுமதியானவுடன் அவர்களின் ரத்தத்தை முழுமையாக பரிசோதனை செய்கின்றனர். ரத்தஅழுத்தம், சர்க்கரை போன்ற உடல் பரிசோதனைகளை செய்த பின்னர், அதற்கு தகுந்த சிகிச்சையை அளிக்கின்றனர்.

அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளின் உடல்நலனை கண்காணித்து கொண்டே இருந்ததோடு, ஒவ்வொரு நோயாளியிடமும் மிகவும் கனிவாகவும், அக்கறையாகவும் நடந்து கொண்டனர். மற்ற மருத்துவமனைகளை ஒப்பிடும்போது பி.எஸ்.ஜி யில் சிறந்த சிகிச்சை அளிக்கின்றனர்.

மருத்துவர்களும், செவிலியர்களும் நமக்கு இருக்கும் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சையை தருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு ஏற்ற மாதிரியான உணவுகளை வழங்கினார்கள். பி.எஸ்.ஜி யில் குறை என்று கூறுவதற்கு எதுவுமில்லை.

தரமான மருத்துவ சிகிச்சை

செந்தில்குமார், சாய்பாபா காலனி, கோவை

எனக்கு கொரோனா பாசிடிவ் என வந்தவுடன் பி.எஸ்.ஜி மருத்துவமனை பொது வார்டில் அனுமதிக்கப்பட்டேன். சென்றவுடனே நல்ல சிகிச்சை அளித்தனர்.

தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் மருத்துவர்கள் நோயாளிகளை பார்வையிட்டு, என்னவிதமான பிரச்சனை உள்ளது என கேட்கின்றனர். ரத்த பரிசோதனை, சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை எடுத்து ஆய்வு செய்வதோடு, ஆக்ஸிஜன் அளவையும் தொடர்ந்து கண்காணித்தனர்.

மூன்று நேரமும் நல்ல சத்தான உணவுகளை வழங்குவதால் அதை சாப்பிட்டாலே கொரோனாவை எதிர்த்து போராடும் ஆற்றல் கிடைக்கும். கழிவறை போன்ற இடங்களை தூய்மையாக பராமரிக்கின்றனர். நோயாளிகளின் காப்பீடு திட்டங்களையும் மருத்துவமனை நிர்வாகமே நடைமுறைப்படுத்தி தருகின்றனர் .

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனாவிற்கான மருத்துவ கட்டணமும், சிகிச்சை முறையும் சிறந்த முறையில் இருந்தது.

மருத்துவத் துறையில் நம்பர் 1

பாபு, ராமநாதபுரம்

கொரோனா முதல் அலையில் எனக்கு தொற்று ஏற்பட்ட போது நான் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டேன்.

மருத்துவர்களும், செவிலியர்களும் நல்ல முறையில் கவனித்து கொண்டார்கள். தொற்றின் தீவிரத்தை பொறுத்து அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்பட்டது. தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும்தான் மருந்து அளித்தார்கள். மற்றவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கி, சிகிச்சை மேற்கொண்டார்கள். மருத்துவத் துறையில் நம்பர் 1 மருத்துவமனையாக திகழும் பி.எஸ்.ஜி யில் மருத்துவ கட்டணமும் குறைவாக தான் இருந்தது. இதற்கு பி.எஸ்.ஜி மருத்துவ நிர்வாகத்திற்கு தான் நன்றி கூறவேண்டும்.

Patient & Kind Staff

– G.M.Arunshankar, Tirupur

I wish I could mention all the names of the Marketing and nursing staff but I could not remember the names. One word that describes your hospital’s staff is caring. Because of that, I thank you for helping me recover during my confinement.

The patience, kindness, and understanding they gave me during this hospital stay made me travel all the way from Tiruppur to Coimbatore for treatment. It must never be forgotten that they made me feel at home. I express my wholehearted appreciation for their care and professional attention paid for my speedy recovery.

Reasonable Charges, Quality Care

– C.Gopinath, Kallakurichi

My father was infected with Corona and had oxygen level till 70 against 96. We had admitted him to PSG Hospitals on July 12th, last year. My father was at 95% risk because he was kept under 16 liter oxygen levels when he was admitted and doctors echoed the same.

But PSG doctors had given him quality treatment and care which helped him to recover from ICU condition to normal ward condition within nine days. He got discharged with full recovery on 27th July.

PSG hospitals’ treatment has gained an impression in my Kallakurichi district that “H.âv.T. «ð£ù£™ H¬öˆ¶‚ ªè£œ÷ô£‹” Even during the pandemic situation, PSG hospitals’ charges were reasonable when compared to other hospitals. The hospital communicated the health status at stipulated time which is a very good process.

I would like to thank all the PSG hospital Staff,Nurses & Admins wholeheartedly for the seamless treatment that was offered. Also a Special Thanks to Arun (Marketting Manager) and Subhash (Covid Block Billing) for assisting us from the admission till the final discharge.

Usually the people from my district used to go to Chennai for any treatment but they have changed their mind and started suggesting PSG hospital for Non-Covid diseases as well.”

Dedicated & Very Professional

– Tony Singh, Coimbatore

I wish to bring to the notice of everybody about the wonderful facilities and treatment that PSG Hospital offers there for the covid patients. The staff is so dedicated, the equipment is neat and clean and the patients are looked after with utmost dedication and care.

The nurse and staff go out of their way to make the patients feel relaxed and at home. Round the clock, they are monitoring the patients there. The covid-block and wards were well lit, neat and clean, not a speck of dust could be found there. The food was excellent and like that of a five-star hotel, and the way they approach, treat and talk to us were very professional.

When I spoke with other patients who were there with me in the covid block, they expressed that they were very well looked after and cared for by the hospital. God forbid that others should not suffer this covid infection, but if that happens to anyone, I would personally recommend PSG Hospitals for their treatment.

Best in Class

– Akshayaa Murugesan

My father was tested Covid positive and admitted at PSG hospital. He made full recovery after 15 days of stay.

I am glad to share his feedback on his behalf. Starting from care and treatment, all the other facilities provided were overwhelming. All nurses, doctors and other staff in the covid ward were very courteous and kept us well informed on the treatment and daily progress.

Diet and nutrition services provided were excellent and best in class. I would like to take this as an opportunity to thank all the staff who took care of the patients at Covid ward.

Also, insurance services were provided on the very next day of admission. Unlike our experience with other hospitals on the insurance front, we were informed and guided on the insurance process completely by the Manager and team.

There were queries raised by the insurance company on the day of our discharge. However, all were swiftly responded to by the insurance team. Thanks to their professional management.

Over all, in this pandemic, we are thankful that we got admission at PSG hospitals and grateful to the management for their excellent service.

Courteous & Kind

– Sriram (Name Changed)

 I received the best attention under the over powering work load that they were handling. The wards were clean and the toilets were modern and well maintained.

Though I pushed for a room, in retrospect I will recommend that the ward is the ideal option as you get timely and continued attention at all times.

The staff were courteous and kind to everyone and never showed their stress on patients. Doctors took time to speak to relatives of elderly patients to assure them that their elder is doing well.

Even the guy who came to clean and sanitise my room every day refused to accept a tip. PSG has notched itself several rungs higher than any hospital in the State of Tamilnadu; I believe this from my first hand experience, and from what I hear from people who have been here and the experiences of people who have been to other hospitals.

I am proud that I studied, worked and in some way or the other continue to contribute to it. The founding fathers’ vision of ’Let there be charity so that others can share my family’s prosperity’ has been credibly delivered with the hospital’s deft handling of Covid situation.