ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் “வணிக வைபவ் 18”

ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், வணிக நிர்வாகம் துறை மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி செல் ஆகியவை இணைந்து இன்று (09.02.2018) “வணிக வைபவ் 18” கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இதில், மகளிருக்கான துணிகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், மெஹந்தி வரைதல் என காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியை பிபிஏ துறை பேராசிரியர் ஜெயந்தி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். வண்ணமயமான இக்கண்காட்சியில், சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.