குடிநீர் பகிர்மான அபிவிருத்தி கூட்டம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக, மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கிகிணர், சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி பகுதிகளில் ரூ.189.57 கோடியில் தொடங்கப்படவுள்ள குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் சரவணம்பட்டி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குடிநீர் வடிக்கால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாக பொறியாளர்கள் ரங்கராஜன், சம்பத்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் நடராஜன், உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகர், உதவி பொறியாளர் சக்திவேல், எழில் ஆகியோர் கலந்துகொண்டு இத்திட்டம் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.