கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு இன்று (03.06.2021) ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகளை பார்வையிட்ட பின்னர், கஸ்தூரி காந்தி நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த கோவிட் கேர் சிறப்பு கார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் தினசரி எந்தெந்த பகுதிகளுக்கு செல்கிறீர்கள், தினசரி எத்தனை நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறீர்கள் என கேட்டறிந்தார்.

அதே பகுதியில் மாற்றுத் திறனாளி பெண்ணிடம் தடுப்பூசி செலுத்தி விட்டிர்களா என கேட்டறிந்து, அப்பகுதி பொதுமக்களிடம் தினசரி சுகாதார பணியாளர்கள் வருகிறார்களா எனவும், சளி, காய்ச்சல் குறித்தும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் வெப்ப அளவினை கண்டறிவது போன்ற பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனை தொடந்து, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள வந்திருந்த செவிலியர்களிடம் களப்பணியில் ஈடுபடும் போது தகுந்த பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறியுறுத்தினார்.