இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் தன்னார்வ அமைப்பு

கோவையை சேர்ந்த ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ (Feed the city) என்ற தன்னார்வ அமைப்பினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் மற்றும் ஏழைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ தன்னார்வ அமைப்பினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ (Feed the city) அமைப்பின் நிறுவனர் ஜான் சாமுவேல் கூறியதாவது:

கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ அமைப்பில் 160 தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

படிக்காத குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பணியைத் துவங்கினோம். அதோடு, மலைக்கிராம மக்களிடையே சானிடைசர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, ஏழைகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

இந்த நிலையில் தான் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுவதும், அதோடு, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கான கட்டணமும் அதிகரித்துள்ளது தெரியவந்தது. அப்போது நண்பர்களின் கார்களை வாங்கி அதனை ஆம்புலன்ஸாக மாற்றி, அதில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாடகைக்கு வாங்கி பொருத்தியுள்ளோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஊரக பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு உதவத் தொடங்கினோம். அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழைகளுக்கும் உதவினோம் . இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 1800 பேரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்று, மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம். தற்போது 4 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. எனவே கார்களுக்கு பதிலாக ஆம்புலன்ஸ் ஒன்றையே வாங்கத் திட்டமிட்டு வருகிறோம்.

ஏழைகள் மற்றும் கர்ப்பிணிகள் மட்டும் ஆம்புலன்ஸ் சேவையை பெற 9952329813 தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.