கோவில்பாளையத்தில் கே.எம்.சி.ஹெச்-மருத்துவமனையின் புதிய கிளை துவக்கவிழா

மருத்துவ துறையில் கடந்த 27 வருடங்களாக தனித்துவம் பெற்று விளங்கும் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தனது புதிய கிளையினை இன்று (04.02.18) கோவில்பாளையத்தில் மாண்புமிகு  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள், டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ஜுணன், ஏ.சண்முகம் மற்றும் ஆர்.கனகராஜ் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

“கே.எம்.சி.ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை” என்ற பெயரில் சத்தி ரோடு கோவில்பாளையத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக துவங்கியுள்ள. இம்மருத்துவமனையில், 100 படுக்கை வசதிகள், 24 மணி நேர விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், பொதுநல மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய நல மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய மருத்துவ பிரிவுகள் கொண்டுள்ளது. மேலும் ஐ.சி.யூ (ICU), எக்ஸ்ரே(X-RAY), எக்கோ(ECHO), டிரெட்மில்(TMT), அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்(ULTRA SOUND SCAN), லேப் (LAB),பார்மஸி (PHARMACY) போன்ற சிறப்பு வசதிகளும் உள்ளன.

சிறப்பு மருத்துவர்களாக, டாக்டர் ஐ. தேவகுஞ்சரி (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்), டாக்டர் எஸ்.கார்த்திகேயன் (பொது நல மருத்துவர்), டாக்டர் வி.நளினி (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்), டாக்டர் பி.செந்தில்குமார் (குழந்தைகள் நல மருத்துவர்), டாக்டர்.ஜே.பாலகுமாரன்,(இருதய நல மருத்துவர்), டாக்டர் வி.விமல் குமார் (எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர்) மற்றும் டாக்டர் எல். ஜெயா சுகந்தி (பொது நல மருத்துவர்) ஆகியோர் திறம்பட செயலாற்ற உள்ளனர்.