உலகின் சிறந்த நூலகங்கள்

நூலகங்கள் புத்தகங்களை பாதுகாத்து  அனைத்து தலைமுறைக்கும்  அறிவை கடத்தும் ஒரு ஊடகமாக  செயல்படுகிறது. நாம் அறிந்திராத பல தகவல்களை நூலகம் தனக்குள் வைத்துள்ளது.  உலகில்  உள்ள சில சிறந்த நூலகங்களின் அமைப்பும், அதன் கட்டிடக் கலையின் சிறப்பும், நட்சத்திரங்களின் குவியல் போன்று அங்கு குவிந்துள்ள புத்தகங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.  அவ்வாறு அமைப்பெற்றுள்ள நூலகங்களை பற்றி இங்கு காண்போம் .

தி லைப்ரரி ஆஃப்  காங்கிரஸ் :

உலகின் மிகப்பெரிய இந்நூலகம் அமெரிக்காவின் வாஷிங்டன் இல் அமைந்துள்ளது. இங்கு அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட பல புத்தகங்கள் உள்ளது. சுமார் 110 மில்லியன் புத்தக சேகரிப்புகளை கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் நூலகம் :

லண்டனில் அமைந்துள்ள இந்நூலகம் 3000 ஆண்டுகால வரலாற்று பழமையான புத்தகங்களை கொண்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தை சேர்ந்த அனைத்து புத்தகங்களும் இங்கு உள்ளன. 25 மில்லியன் புத்தகங்கள் அமைத்துள்ளன. மேலும் 746 கிலோ மீட்டருக்கு மேல் புத்தக அலமாரிகள் ஆக்கிரமித்துள்ளன.

நியூயார்க் பொது நூலகம் :

இந்நூலகம் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நூலகமாகவும், உலகின் மிகப்பெரிய மூன்றாவது நூலகமாகவும் அமைத்துள்ளது. 125 மைல் தூரம் வரை உள்ள புத்தக அலமாரியில் உலகில் உள்ள அனைத்து புத்தகங்களும் உள்ளன. நமக்கு எதை பற்றிய தகவல் வேண்டுமானாலும் இந்நூலகத்திற்கு போன் செய்து கேட்டால் அங்கிருக்கும் ஊழியர்கள் நமக்கு உடனடியாக தகவல்களை வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு இவ்வாறு பல ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

பிரான்சின் தேசிய நூலகம்:

இந்நூலகம் பாரிஸில் அமைத்துள்ளது. 15 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் 350,000 பத்திரிக்கைகள் இங்கு உள்ளன. உலகின் பல அரிய பொருட்கள், ஓவியம்  போன்றவை இந்த இடத்தில் அமைந்துள்ளன. இந்நூலகத்தின் வாசிப்பு அறை மிக அழகிய கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ளது.

லாயல் டானிஷ் நூலகம் :

1648 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம் டென்மார்க்கில் அமைந்துள்ளது. இந்த நூலகம் முழுவதும் பெண்களால் நடத்தப்படுகிறது. இக்கட்டிடம் முழுவதும் கருப்பு நிறக் கண்ணாடிகளை கொண்டுள்ளது. உலகில் உள்ள பல அரிய வரலாற்று புத்தககங்கள்  இங்கு உள்ளன.

சீனாவின் தேசிய நூலகம் :   

ஆசியாவிலே மிகப்பெரிய நூலகமான இது சீனாவின் பெய்ஜிங்கில் அமைத்துள்ளது.நேர்த்தியான அழகிய கட்டிட வடிவமைப்பை பெற்றுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 10,000 மின் நூல்களை கொண்டுள்ளது.