இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கோரி ஆட்சியரிடம்  மனு

கிராமிய கூட்டு குழலிசைக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர், வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொள்வதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று (19.4.2021) மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: கொரோனா வைரஸ் நோய் பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவின்  காரணமாக எந்தவொரு இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை என்றும் இச்சங்கத்தில் பேண்டு இசைக் கலைஞர்கள் பெரும்பாலானோர் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இசை நிகழ்ச்சிகள் நடத்த இயலாமல் இருப்பதால் இசைக்கலைஞர்களின்  வாழ்வாதார நிலை மிகவும் நலிவுற்று உள்ளது. எனவே இசைக்கலைஞர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளவும், தகுந்த பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும், பேண்டு இசைக் கலைஞர்களை பயன்படுத்திக் கொள்ளவும், கலைஞர்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவுமாறும் மனுவில் தெரிவித்திருந்தனர்.