மீண்டும் முழு ஊரடங்கைத் தாங்க முடியாது – கிருஷ்ணசாமி பேட்டி

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் தொழிற்கூடங்களால் மீண்டும் முழு ஊரடங்கைத் தாங்க முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் (15.4.2021)இன்று தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:

கொரோனோ பெருந்தொற்று வேகமாகப் பரவுவது மிகவும் வேதனையளிக்கிறது எனவும், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்களால் மீண்டும் ஒரு முழு ஊரடங்கைத் தாங்க முடியாது என தெரிவித்தார்.  எனவே அப்படி ஒரு எண்ணமே வரக்கூடாது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும்.

கொரோனோ அறிகுறிகள் தென்பட்டாலே உடனே சிகிச்சை தொடங்க வேண்டும். தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு அலட்சியம் காண்பிக்காமல் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்காமல், முகக்கவசம் வழங்க வேண்டும். மாநில, மாவட்ட அளவில் அரசியல் கட்சித் தலைவர்களை வைத்து குழு அமைத்து கொரோனோவை கட்டுப்படுத்த வேண்டும். எனக் கூறினார்.