வாக்கு எண்ணும் மையத்தில் சௌகரியம் இல்லை என ஆர்ப்பாட்டம்

கோவை ஜி.சி.டி வளாக வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பா.ஜ.க வினர் இன்று (10.4.2021)ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் முடிந்த 6 ம் தேதி அன்றே கோவை ஜி.சி.டி வளாகத்தில் பத்திரப்படுத்தப்பட்டன. இந்த அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாகவும் உள்ளது.

இந்த வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள வளாகத்தை பல கட்சியை சேர்ந்த தொண்டர்கள் எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சூழலில், வளாகத்தில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க வினர் ஜி.சி.டி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உணவு உள்ளிட்ட அடிப்ப்டை வசதிகள் எதுவுமே முறையாக செய்யப்படவில்லை என்று கூறினார்.  உடனையாக பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.