ரேசிங் பயிற்சியாளர், இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம்

கோவையை சேர்ந்த ரேசிங் பயிற்சியாளர் தருண்குமார் கரி மோட்டார் ஸ்பீடு வேயின் ஒரு சுற்றை அதி வேகமாக ஒரு நிமிடம் இருபத்து மூன்று நொடிகளில் கடந்து இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம்  பிடித்தார்.

கோவையை சேர்ந்த தருண்குமார் படித்து கொண்டே சி.ஆர்.ஏ.மோட்டார் ஸ்போர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் ரேசில் ஆர்வமுடையை மாணவ,மாணவிகளுக்கு அதி வேக ரேசில் கலந்து கொள்வதற்கான தொழில் நுட்பங்கள் மற்றும் ரேசிங் குறித்த பயிற்சி அளிக்கிறார்.

கோவையில் உள்ள தேசிய அளவில் பிரபலமான கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயின் ஒரு சுற்றை தனது 300 சி.சி.அதி வேக பைக்கில் ஒரு நிமிடம் 23 நொடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.

இந்த சாதனையை டெல்லியில் இருந்து வந்த இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் வினோத் குமார் கண்காணித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

தனது சாதனை குறித்து தருண்குமார் கூறுகையில்:   இந்த சாதனையை செய்ய ஊக்கமளித்த டி.வி.எஸ்.டயர் நிறுவனத்திற்கும் அதன் பொது மேலாளர் லட்சுமணன் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார். தனது சாதனையை இன்னும் குறைந்த நேரத்தில் கடந்து மேலும் சாதனை படைப்பதே தமது அடுத்த இலட்சியம் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதே ட்ராக்கில் இவரது மாணவரான அபினவ் என்ற கல்லூரி மாணவரும் குறைந்த நேரத்தில் ஒரு சுற்றை கடந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.