கே.பி.ஆர் கல்லூரியில்அறிவுசார் சொத்து உரிமைகள் – பயிற்சிப் பட்டறை

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மைத் துறையும் “இண்டலேக்சுவல் ப்ரபர்ட்டி ரைட்ஸ்” (INTELLECTUAL PROPERTY RIGHTS)  இணைந்து அறிவுசார் சொத்து உரிமைகள் குறித்த பயிற்சிப் பட்டறையை  செவ்வாய்க் கிழமை (30/03/2021) இணையவழியில் நடத்தியது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க மாநிலத்தின் (WTO ஆய்வு மையம்) சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் தனபட் ராம் அகர்வால் அவர்கள் கலந்துகொண்டுபேசுகையில்:

அறிவுசார் சொத்து என்பது மனித படைப்புகளை உள்ளடக்கிய ஒரு  வகை சொத்து, மற்றும் முதன்மையாக பதிப்புரிமை, காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதை எடுத்துரைத்தார்.

வர்த்தக ரகசியங்கள், விளம்பர உரிமைகள், தார்மீக உரிமைகள் மற்றும் நியாயமற்ற போட்டிக்கு எதிரான உரிமைகள் போன்ற பிற வகையான உரிமைகளும் இதில் அடங்கும் என்பதை எடுத்துக்கூறி, இசை மற்றும் இலக்கியம் போன்ற கலைப் படைப்புகள், அத்துடன் சில கண்டுபிடிப்புகள், சொற்கள், சொற்றொடர்கள், சின்னங்கள் மற்றும் வடிவமைப்புகள் அனைத்தும் அறிவுசார் சொத்தாக பாதுகாக்கப்படலாம் என்றும், அறிவுசார் சொத்துச் சட்டத்தின் முக்கிய நோக்கம் பல்வேறு வகையான அறிவுசார் பொருட்களை உருவாக்க ஊக்குவிப்பதாகும் என கூறினார்.