பேஷன் ஆர்ட் பயிற்சி மையம் சார்பாக யாதுமாகி நிற்பவள்

கோவையில் பேஷன் ஆர்ட் ஆடை அலங்கார பயிற்சி மையம் சார்பாக யாதுமாகி நிற்பவள் எனும் மகளிர் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஃபன் மால் வணிக வளாகத்தில் கடந்த இரண்டு நாட்கள்  நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான நடனம்,பாட்டு,சமையல் மற்றும் அழகு கலை,உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

முதல் நாள் சிறப்பு அழைப்பாளராக ஒன் கேர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அப்துல் சலாம் கலந்து கொண்டு ஒரு வீட்டில் தாயாகவும், மனைவியாகவும் பல சேவைகள் புரியும் பெண்களின் பெருமை குறித்து பேசினார்.

தொடர்ந்து இரண்டாம் நாளாக,   சிறு குழந்தைகள் கலந்து கொண்ட ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் பேஷன் ஆர்ட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் டிசைன் செய்த ஆடைகளை அவரவர் குழந்தைகள் அணிந்த வண்ணம் ஒய்யார நடை நடந்தனர்.இயற்கை பாதுகாப்பு,சுற்றுச்சூழல்,பசுமை மற்றும் பழங்களின் தேவை என பல்வேறு தலைப்புகளில்  ஆடைகளை வடிவைமைத்திருந்தனர்.

இதற்கு நடுவர்களாக முன்னனி பேஷன் டிசைனர்கள் சில்பா, பானுபிரியா, ஹாஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு, சிறப்பு அழைப்பாளர்கள் அம்மா சேவா டிரஸ்ட்டின் நிறுவன தலைவர் சோனாலி பிரதீப், மதர் டிரஸ்ட் செயலாளர் கவுசல்யா, லலித் கலாஷேத்ரா செயலாளர் விக்னேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு  கேடயங்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர்.