ஐரோப்பிய நாடுகளில் இரு மடங்காக அதிகரித்த கொரோனா

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தொற்று இரு மடங்காக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஐந்து நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

மேலும் ஈஸ்டர் வரவுள்ள நிலையில் அதற்க்கான கொண்டாட்டங்களில் மக்கள் அதிகளவு வெளியில் கூடுவார்கள்,  இதனால்  தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 1 முதல் 5 வரை ஜெர்மனியில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியமாக தேவைப்படும் மளிகை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் கூறியதாவது:

வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நிலைமை தற்போது மீண்டும் மோசமாகி உள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்றார். இந்த புது வகை வைரஸ் வேகமாக பரவி அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், தினசரி பாதிப்பு 100% அதிகரித்திருப்பதாகவும், பாதிப்பு மோசமடைந்து உள்ளதாலே ஊரடங்கை அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.