அஷ்ட காலபைரவர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

கோவை ராமானுஜர் நகர் பங்காரு லே – அவுட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு அஷ்ட காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேகம், ஆராதனை பூஜை மற்றும் அன்னதானம் இன்று (10.03.2021) நடைபெற்றது.

இத் திருக்கோவிலுக்கு வந்து தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெற முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

மேலும் தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவது விசேஷமாக இருக்கிறது.  நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.

எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்னைகள் எல்லாம் கால பைரவரை வணங்கினால் நீங்குவதுடன், லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அரிமா செந்தில்குமார், குணநந்தா சுவாமி, வெங்கடேஷ், கிருஷ்ணமூர்த்தி, மாரிசாமி, கிட்டப்பன், கோபால், அர்ச்சகர்பாலு, சுப்ரமணி, செளந்தராஜ், நவீன்,செல்வகுமார், கண்ணன், கருப்புசாமி, சஞ்சய் அசோசியேட்ஸ் சீனிவாசன், அகத்தியன், ஐயப்பன் சம்பத்குமார், கிருஷ்ணகுமார், ஹரிணி கோட்டிங்ஸ் வெங்கடேஷசன் மற்றும் அனைத்து குடும்பத்தார்களும் கலந்து கொண்டனர்.