வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு மாநில அறிவியலாளர்கள் விருது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சிவகுமார் மற்றும் முரளி அர்த்தனாரி அவர்களுக்கு தமிழ்நாடு முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர்கள் விருது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் ராஜேஷ் லக்கானி அவர்களால் வழங்கப்பட்டது.  இவ்விருதுடன் தலா ரூ. 20,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருதானது, வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்  சிவக்குமார்க்கு   பயிர் மற்றும் நுண்ணுயிர்களுக்கு இடையேயான தொடர்பு பற்றிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றதற்காகவும் மற்றும் 105க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்ததற்காகவும் வழங்கப்பட்டது.

உழவியல் துறை இணைப்பேராசிரியர், அகில இந்திய ஒருங்கிணைந்த களை ஆராயச்சித்திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி   முரளி அர்த்தனாரிக்கு தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது  வழங்கப்பட்டது. இவ்விருதானது பயிர்களில் மேலாண்மை தொழில்நுட்பங்களை சிறந்த வகையில் உருவாக்கியதற்காகவும், 55க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டதற்காகவும் வழங்கப்பட்டது. மேலும் இவர் நெல், மக்காச்சோளம், சூரியகாந்தி மற்றும் பருத்தியில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை தொழில்நுட்பங்களை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.