பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட திமுக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பேசுகையில், கடந்த 7 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும் சிறு குறு தொழில்கள் நிறுவனங்கள், பஞ்சாலைகள் பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கபட்டு உள்ளதாகவும்  லட்ச கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவித்தார். மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசையும் அதற்கு துனை போகின்ற அதிமுக அரசையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், தீர்மான குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் மேயர் ராஜ்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, வழக்கறிஞர் கேஎம்.தண்டபாணி, வடவள்ளி துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.