மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்

மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை  தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி தேர்வுகள் நிறைவடைகின்றன. மேலும் இப்பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுசேரியில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதயுள்ளதாகவும், காலை 10 மணிமுதல் மதியம் 1.15 மணிவரை தேர்வுக்கான நேரம் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள பொதுத் தேர்வு அட்டவணை:

மே 3ம் தேதி – மொழிப்பாடம்

மே 5 -ஆங்கிலம்

மே 7 – கணினி அறிவியல்

மே 11- இயற்பியல், பொருளாதாரம்

மே 17- கணிதம், விலங்கியல்

மே 19 – உயிரியல், வரலாறு

மே 21- வேதியியல், கணக்கு பதிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.