குடியரசு தினம் என்றால் என்ன?

இந்திய விடுதலைக்கு பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்  நாம் ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும் . தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும்  முறை குடியாட்சி எனப்படுகிறது . ‘மக்களுக்காக ,மக்களுடைய , மக்கள் அரசு’ என குடியரசுக்கு சரியான ஒரு இலக்கணம் வகுத்தவர்  அமெரிக்கா ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் . மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக  மாறும் எனக் கருதி  உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு  சட்டம் .

இந்திய விடுதலைக்கு பிறகு மக்களாட்சியின் மூலம் மட்டுமே ஒரு நாடு சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும் எனக் கருதி, டாக்டர் பி .ஆர் . அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்  . மேலும் இந்த நாளில்  நமது நாட்டை  அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றி இன்னுயிரை நீத்த தியாகிகள் , மற்றும் வீரர்களை நினைவு கூறும் வகையில்  விடுமுறை அளிக்கப்பட்டு  நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

 

Story by : Ramya.S