தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திறந்தவெளி பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வழியாக நடத்தப்பெற்ற முதுநிலை பண்ணை அறிவியல் ஆகிய இரண்டாண்டு முதுநிலைப் பட்டபடிப்பிற்கும். ஒராண்டு பட்டயப்படிப்பான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கும் பட்டம் மற்றும் பட்டயம் வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை 22.01.2021 நடைபெற்றது. இவ்விழாவில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற 322 மாணவர்களில் 14 மாணவர்கள் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிலும், 2 மாணவர்கள் முதுகலை பண்ணைத் தொழில்நுட்பத்திலும், 2 மாணவர்கள் முதுநிலை பண்ணை அறிவியல் பாடப்பிரிவுகளிலும் முதன்மை மாணவர்களுக்கான பட்டங்களை பெற்றனர்.

முன்னதாக இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் தலைமை உரை நிகழ்த்தினார். இவ்வுரையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் விவசாயிகளுக்கும் வேளாணமை சார்ந்த நிகழ்வுகளுக்கும் பாலமாக விளங்கும் இவர்கள் தாம் பெற்ற இக்கல்வியின் மூலம் வேளாண் மக்கள் பயன்பெறுமாறும், உதவுமாறும் அறிவுரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பி.ஏ.எஸ்.எப் (BASF)-யின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜானகிராம் ராஜா மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் உதவிப் பொது மேலாளர் மற்றும் ஆசிய பசிபிக் தென்னை வாரியத்தின் இயக்குநர் ரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் விவசாயிகளோடு அதிக தொடர்புடையவர்கள் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களே ஆவர். இவர்களுக்கு இந்தப் பட்டயப்படிப்பு பட்டயம் பெறுபவர்களுக்கு மட்டுமல்லாது விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் எனக்குறிப்பிட்டனர். மேலும் விவசாயிகளுக்கு உறுதுணையாய் அமைய பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்வில் 83 வயது முதியவர் பட்டம் பெற்றதை அறிந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அம்முதியவரை வெகுவாகப் பாராட்டினார்.