2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும்

2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும் என்றும், அவற்றில் 2 கிரகணங்கள் இந்தியாவில் தென்படும் என்று மத்தியப் பிரதேச, உஜ்ஜைனை சேர்ந்த வானிலை ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘ 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழ இருக்கின்றன. மே மாதம் 26ம் தேதி சந்திரகிரகணம் நிகழும். இது மேற்கு வங்காளம், கடலோர ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் தெரியும். ஜூன் மாதம் 10ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் நிகழும். இது 94.3 சதவீதம் சூரியனை மூடி, நெருப்பு வளையமாக காணப்படும். ஆனால் இந்தியாவில் இதை பார்க்க முடியாது. நவம்பர் 19ம் தேதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். இதை அருணாசல பிரதேசம் மற்றும் அசாமின் சில பகுதிகளில் குறுகிய நேரத்துக்கு பார்க்க முடியும். டிசம்பர் 4ம் தேதி பூரண சூரிய கிரகணம் ஏற்படும். சந்திரனின் 97.9 சதவீதம், பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும். இந்த பூரண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.’’ என்றார்.