5 கே கார்ஸ் நிறுவனத்தின் 50வது கிளை துவக்கம்

கோவையில் 500 கலைஞர்களை இணைத்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகளை தனது நிகழ்ச்சியில்  நடத்திய கார்த்திக் குமார் நோபல் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் கார்களை சர்வீஸ் செய்யும் 5 கே கார்ஸ் நிறுவனம் தனது 50வது கிளையை கோவை அவினாசி சாலையில் துவங்கியது. இதற்கான துவக்க விழாவில் 500 கலைஞர்களை வைத்து 50க்கும் மேற்பட்ட கலைகளை நடத்தினர். பறையாட்டம், சிலம்பாட்டம், சுருள் சுத்துவது, கரகாட்டம் என பல்வேறு நாட்டுப்புற கலைகள் நடத்தப்பட்டன. இதில் ஏற்கனவே தனி நபர்  உலக சாதனை நிகழ்த்தியவர்களும் கலந்து கொண்டனர். ஒரே நாளில் 500 பேரின் கலை நிகழ்ச்சி செய்த கார்த்திக் குமாருக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்ட் சாதனைக்கான சான்றிதழை தீர்ப்பாளர் தியாகு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தீர்ப்பாளர் தியாகு கூறுகையில் பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பும் எந்த ஒரு கலையோ அல்லது விளையாட்டு என அனைவரும் உலக சாதனையாளர்களாக மாறலாம் என தெரிவித்தார்.