சர்வதேச மனித உரிமைகள் தினம் : பெண்கள் மோட்டார் பைக்குகளில் பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கோவை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் அதிக திறன் கொண்ட கே.டி.எம்.மோட்டார் பைக்குகளில் பேரணியாக சென்றனர்.

உலகம் முழுவதும் ஆரஞ்சு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், ஏற்ற தாழ்வுகள், ஜாதி மத வேறுபாடுகள் இன்றி சம உரிமை மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள கியர் அப் பைக்கர்ஸ் குழுவை சேர்ந்த பெண்கள் கே.டி.எம். பைக்குகளை ஓட்டியபடி ஊர்வலமாக சென்றனர். குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ஈகிள் மோட்டார்ஸ் முன்பாக துவங்கிய இந்த இரு சக்கர வாகன பேரணியை அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட இணை செயலாளர் சோனாலி பிரதீப் துவக்கி வைத்தார். முன்னதாக கே.டி.எம்.இன் புதிய வகை அறிமுகமான கே.டி.எம்.அட்வெஞ்சர் 250 ரக மாடல் பைக்கை அவர் அறிமுகம் செய்து வைத்தார். கோவை அவினாசி சாலையில் துவங்கி ஆனைக்கட்டி பகுதி வரை சென்ற இந்த பேரணியில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.