ரெண்ட்லி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் – ரத்தினம் கல்விக் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாணவர்கள் கல்லூரியில் பயிலும்போதே தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் விதமாக கோவையைச் சேர்ந்த ரெண்ட்லி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ரத்தினம் கல்விக் குழுமம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கோவை : கல்லூரி மாணவர்கள் பயிலும் போதே செய்முறை  திறன் அறிவை வளர்க்கும் விதமாக ரத்தினம் கல்வி குழுமத்தில் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் கோவையை சேர்ந்த ரெண்ட்லி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா ரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரத்தினம்  கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற இதில், ரெண்ட்லி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிஜாய் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினர் பேசுகையில், இன்றைய உலகம் இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. எனவே மாணவர்கள் இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயில வேண்டும் எனவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தின் பொறியாளர்கள் மாணவர்களுக்கு  தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும், நிறுவனத்திலும் பயிற்சி அளிக்க உள்ளதோடு, மாணவர்கள் இதே நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளையும் பெற முடியும் என தெரிவித்தனர். ரத்தினம்  கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி பேராசிரியர் மாணிக்கம், கல்லூரியின் முதல்வர் முரளிதரன், உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.