ராமகிருஷ்ணா கல்லூரியில் கேக்கிரீம் அலங்காரதிற்கான பிரத்யேக பணியரங்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை, காரைக்குடி பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து “ஃபிரஸ் கிரீம் ஐசிங்” என்ற கேக் கிரீம் அலங்காரத்திற்கான பிரத்யேக செய்முறைப் பயிற்சி பணியரங்கத்தை நடத்தியது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினர்களாக விவோ இன்கிரிடியன்ட்ஸ் நிறுவன மேலாளர் ராஜகோபால்பாலாஜி, கல்லூரியின் முன்னாள் மாணவர் துபாய் மேண்டரின் ஓரியண்டல் சீனியர் செஃப் ஆனந்த் ராமகிருஷ்ணன் மற்றும் செஃப் டெசோட்டா காளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இணையவழியில் நேரலையாக நடைபெற்ற இந்நிகழ்வில் நவீன காலத்திற்கு ஏற்ப புதுவிதமான கேக்குகள் தயாரிப்பது குறித்தும் ஃபிரஸ் கிரீம் ஐசிங் என்ற கேக் கிரீம்களின் புதுவித அலங்கார வடிவமைப்பு குறித்தும் இப்பணியரங்கத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி பேக்கரி மற்றும் உணவகங்கள் தொடங்கும் ஆர்வமுடையோர்களுக்குப் பயனுள்ளதாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தது. இந்த பயிற்சியில் “விவோ” ஃபிரஸ் கிரீம்களை பயன்படுத்தி அலங்காரங்கள் செய்யப்பட்டது. மிகவும் நேர்த்தியாகவும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது

இந்திய அளவில் பிரபலமாக உள்ள இந்தத்துறையை ஒட்டிநடத்தப்பட்ட இந்நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்று இந்நிகழ்விற்குத் தலைமைதாங்கிய கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் குறிப்பிட்டதோடு தயார் செய்யப்பட்ட கேக் வகைகளைப் பார்வையிட்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை இயக்குநர், கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.தீனா மற்றும் துறைப்பேராசிரியர்கள் இந்நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்