வளர்ச்சி பணிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று 17.11.2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை பொன்னையராஜபுரம், ராமகிருஷ்ணாபுரம், சொக்கம்புதூர் ரோடு, பெட்ரோல் பங்க் அருகில் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மூலம் நடைபெற்றுவரும் தூய்மைப்பணிகளை பார்வையிட்டும், பிருந்தா லேஅவுட் பகுதியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தூய்மைப்பணியாளர்கள் மூலம் தரம் பிரித்து பெறப்படும் பணிகளை பார்வையிட்டு பின்னர், அப்பகுதி பொதுமக்களிடம் தூய்மைப்பணியாளர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கின்றார்களா என கேட்டறிந்து, சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்ய வருகின்றார்களா எனவும், சீரான குடிநீர் கிடைக்கப்பெறுகின்றனவா எனவும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து சொக்கம்புதூரில் ரூ.1 கோடியே 49 இலட்சம்  மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் சமுதாயக்கூடத்தை பார்வையிட்டு, அதனுடைய அளவுகள் சரியாக உள்ளதா என அளவுகோல் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர், அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்டு பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டர். தொடர்ந்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கினை பார்வையிட்ட ஆணையாளர், குப்பைக்கிடங்கில் துர்நாற்றம்வராமல் தொய்வில்லாமல் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். வார்டு வாரியாக குப்பைகளை அந்தந்த வீதிகளில் பெறப்படும்போது மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு வரும் குப்பைகளின் அளவை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.