குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய கல்லை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தையின் மூச்சுக் குழாயில் மாட்டிக்கொண்ட கல்லை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி பிராங்காஸ்கோபி மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

திருப்பூர் மாவட்டம் மாதப்பூரை சேர்ந்தவர் முனியாண்டி கூலித்தொழிலாளி இவரது 2 வயது ஆண் குழந்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கல்லை மூக்கில் நுழைந்து விட்டான். கல் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதால் மூச்சு விட முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள சூலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கண்ட பரிசோதனையில் மூச்சு குழாயில் கல் மாட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது. சுவாசக்குழாய் நூண்ணோக்கி பிராங்காஸ் கோபி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.