நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா

நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்ற கோவையை சேர்ந்த மாணவிக்கு பாராட்டுவிழா இன்று(17.10.2020) பீளமேடு பகுதியில் நடைபெற்றது

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நீட் தேர்வு முடிவுகள் இன்று (17.10.2020) வெளியாகியுள்ளது. இதில் ஆகாஷ் அகாடமியில் பயின்ற கோவையை சேர்ந்த தங்கம் என்ற மாணவி 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அகில இந்திய அளவுல் 91 வது இடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில் பீளமேடு பகுதியில் உள்ள ஆகாஷ் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இவருக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மையத்தின் இயக்குனர் நரேஷ் தலைமையில் நடைபெற்ற இதில், இதே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கிஷன், அவனிஷ், வைபவ் மற்றும் வசந்த் ஆகிய மாணவர்களுக்கும் ஆகாஷ் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

மாணவி தங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட்  கஷ்டமான தேர்வு இல்லை. எனவும், மருத்துவம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களை இந்த தேர்வுக்கென தயார் படுத்தினால் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என தெரிவித்தார். மேலும், இணைதளத்தில் நிறைய பாடக்குறிப்புகள் உள்ளன. அதனை வைத்து படித்தாலே நிறைய மதிப்பெண்கள் எடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.