தொழில்முனைவோர்கள் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கறி விதை உற்பத்தித் திட்டம்

மனித ஆரோக்கியத்தில், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தினசரி உணவு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அளவு காய்கறிகளை (நபர் ஒருவருக்கு 1 நாளைக்கு 300 கிராம் காய்கறிகள்) வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப வழங்குவதற்கு காய்கறி உற்பத்தி பரப்பினை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. காய்கறி சாகுபடியின் கீழ் அதிக பகுதியை கொண்டுவர, சான்றளிக்கப்பட்ட மற்றும் தரமான விதைகளை நியாயமான விலையில் போதுமான அளவில் சரியான நேரத்தில் வழங்குவது அவசியமாகிறது. எனவே காய்கறி விதை உற்பத்தி இத்தருணத்தில் மிகவும் அத்தியாவசியமாகிறது.

எனவே இவ்விதைத்தேவையின் முக்கியத்துவத்தையும், காய்கறி விதை உற்பத்தியை லாபகரமாக வியாபாரமாக முன்னெடுப்பதற்கான பெரும் வாய்ப்பினையும் கருத்தில் கொண்டு, முதல்வரால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற வேளாண் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது ரூ.7 கோடியே 50 லட்சம் செலவில்”தொழில்முனைவோர்கள் மூல நாற்றங்கால் மற்றும் காரி விதை உற்பத்திக்கான திட்டம்” அறிவிப்பு செய்யப்பட்டது.

இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களைப் பெறுவதற்கும், இத்திட்டத்தில் இணைத்து பயன்பெறுவதற்கும் விவசாயிகள் தோட்டக்கலை துணி இயக்குநர்களையோ அல்லது வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர்களையோ அல்லது வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர்களையோ தொடர்பு கொள்ளலாம் மற்றும் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.