கோவையில் 1300 சலூன் கடைகள் அடைத்து போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததை கண்டித்து இன்று கோவை மாவட்டத்தில் சுமார் 1300 சலூன்கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கிருபானந்தன் என்பவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அந்த நபரை விடுதலை செய்துள்ளது.

இந்த சூழலில் சிறுமியை படுகொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 1300 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.